கொதிக்கும் எண்ணெய்யை சகோதரர் மீது ஊற்றிய மாதிற்குச் சிறை

கொதிக்கும் எண்ணெய்யை சகோதரர் மீது ஊற்றிய மாதிற்குச் சிறை

1 mins read
9e9179fc-e66f-4656-835a-f62256d09a6d
நொர்ஜஹான் அப்துல் கரிமுக்கு ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  - படம்: பிக்சாபே

அண்ணன் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினார் ஒரு மாது.

அதன் காரணமாக அண்ணனுக்கு கழுத்திலும் முதுகிலும் காயங்கள் ஏற்பட்டன.

அந்த 25 வயது ஆடவர் குணமடைந்துள்ளார். அவரைத் தாக்கிய 21 வயது நொர்ஜஹான் அப்துல் கரிமுக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் அவ்வாறு செயல்பட்டதற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் சம்பவம் நடந்தபோது அவர் மனநிலையில் பாதிப்பு எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, அந்த மாதின் தாயார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பிறகு, நொர்ஜஹான் கைதுசெய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதிவரை மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்