பூன் லே வட்டாரத்தில் உள்ள சாலை ஒன்றில் போக்குவரத்து விளக்கு சிவப்பில் எரிந்து கொண்டிருந்தபோதே அதைக் கடந்து விபத்தை ஏற்படுத்திய ஆடவருக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆடவர் 18 மாதங்கள் வாகனங்கள் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பட்ரோலிசாம் கம்சின் என்னும் அந்த 57 வயது ஆடவரின் ஆபத்தான செயலால் 5 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
விபத்துச் சம்பவம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. ஜாலான் பூன் லே மற்றும் பூன் லே அவென்யூ சாலை சந்திப்பில் விபத்து நேர்ந்தது.
போக்குவரத்து விளக்கை கவனிக்காமல் காரை ஓட்டிய கம்சின் மற்றொரு கார்மீது மோதினார். விபத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
கம்சின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரி என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆடவர் இதற்கு முன்னரும் போக்குவரத்து விதிமுறைகளை மீறித் தண்டிக்கப்பட்டுள்ளார்.