பைட்டான்ஸ் நச்சுணவு: சம்பந்தப்பட்ட உணவு நிறுவனத்துக்கு அபராதம்

நச்சுணவு சம்பவம் தொடர்பில் யுன்ஹையாவ் உணவு விநியோக நிறுவனத்துக்கு $7,000 அபராதம்

பைட்டான்ஸ் நச்சுணவு: சம்பந்தப்பட்ட உணவு நிறுவனத்துக்கு அபராதம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jul 2025 - 6:48 pm

1 mins read

பைட்டான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நச்சுணவு சம்பவம் தொடர்பில் யுன்ஹையாவ் (Yunhaiyao) உணவு விநியோக நிறுவனத்துக்கு $7,000 அபராதம் (ஜூலை 17) விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நச்சுணவு சம்பவத்தில் 171 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்ச தண்டனையை விதித்த நீதிபதி, பலர் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர் என்றும் நல்லவேளையாக எந்த மரணமும் நேரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் 6 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிறுவனம் மெத்தனப் போக்குடன் இருந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

யுன்ஹையாவ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்துக்கு வந்த தலைமை நிர்வாகி லூ சி டாவ், நார்த்பாயிண்ட் சிட்டியில் உள்ள கிளை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதைக் குறிப்பிட்டார். பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு விநியோகம் செய்யப்பட்ட உணவு அங்குதான் தயாரிக்கப்பட்டது.

அதோடு நிறுவனத்தின் அனைத்து சமையல் வல்லுநர்களும் சுகாதாரப் பயிற்சிகளுக்கு மீண்டும் அனுப்பப்பட்டதை அவர் குறிப்பிட்டார். நிறுவனத்தின் கீழ் உள்ள அனைத்து வளாகங்களும் முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட்டன.

வெவ்வேறு உணவுக் கிளைகளில் உள்ள சமைத்த உணவு, சமையல் பொருள்கள் ஆகியவற்றின் தரத்தையும் சரிபார்க்க பாதுகாப்புச் சோதனை குழுவும் அமைக்கப்பட்டதைத் திரு லூ சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்
நச்சுணவுஅபராதம்உணவுவிநியோகம்