70,000 பேரின் தரவுகள் கசிவு

70,000 பேரின் தரவுகள் கசிவு

1 mins read
d1fab46a-8898-420e-a44d-07b12a0b2a78
சிங்கப்பூர் நில ஆணையத்தின் முதன்மைத் தரவுத்தளங்கள் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூர் நில ஆணையத்தின் கணினிச் சேவை மேம்பாட்டுத் தொழில்நுட்பங்களை நிர்வகிக்கும் ‘ஐபிஎம்’ நிறுவனத்தின் மேகக்கணிமைக் கட்டமைப்பிலிருந்து 70,000 பேரின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நில ஆணையத்தின் சொத்துப் பதிவு மற்றும் ஆவணச் சமர்ப்பிப்பு முறைகளை நிர்வகிக்கும் அமைப்பின் சோதனை ஓட்டத்திற்காக 1998ஆம் ஆண்டில் ஒரு தரவுத்தொகுப்பு உருவாக்கப்பட்டது.

அதில் சொத்து உரிமையாளர்களின் பெயர்கள், அடையாள அட்டை எண்கள், முந்தைய வீட்டு முகவரிகள் போன்ற முக்கிய விவரங்கள் இருந்தன. பொதுவாக, இத்தகைய சோதனைகளின் போது பயனர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தரவுகள் அவ்வாறு மறைக்கப்படாமல் இருந்ததே கசிவிற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அனுப்பும் பணியை நில ஆணையம் தொடங்கியுள்ளது. தற்போதைய அதிகாரத்துவ சொத்துப் பதிவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும், பொதுமக்கள் தங்களின் விவரங்களைக் கோரி வரும் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இச்சம்பவம் குறித்துச் சிங்கப்பூர் நில ஆணையம், இணையப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து விசாரித்து வருகிறது. இதுகுறித்துக் காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்