தொலைந்த கைபேசியை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்த ஊழியர்

தொலைந்த கைபேசியை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்த ஊழியர்

1 mins read
50058a63-4b9e-4abf-8df6-c3c84e081918
-

மரினா பே சேண்ட்ஸ் பேரங் காடியின் கழிவறை ஒன்றுக்குச் சென்ற 26 வயது திரு கருணாநிதி சதிஷ் குமார் அங்கே ஒரு கைபேசியைக் கண்டெடுத் தார். கைபேசியின் சொந்தக்காரர் தமது கைபேசி தொலைந்தது குறித்து பெரும் பதற்றத்தில் இருப்பார் என்று அவர் எண்ணிய தால் அந்த இடத்திலேயே கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருந்தார் திரு கருணாநிதி. ஆனால் யாரும் கைபேசியைச் சொந்தம் கொண்டாட வர வில்லை.

உயர்மாடிகளைச் சுத்தம் செய்யும் ஊழியராகச் சிங்கப்பூரில் பணியாற்றிவரும் இந்திய நாட்டவரான திரு கருணாநிதிக்கு, வேலைக்குச் செல்ல நேரம் ஆகிக் கொண்டிருந்ததால் தமது வேலை முடிந்ததும் மரினா பே சேண்ட்ஸ் நிர்வாகத்திடம் கைபேசியை ஒப்படைத்துவிடலாம் எனும் நோக்கத்தில் அதைப் பத்திரமாக ஓரிடத்தில் வைத்துக் கொண்டார். சில மணி நேரம் கழித்து தமது வேலை முடிந்ததும் கைபேசியை எடுத்துப் பார்த்த போது அதில் பல அழைப்புகள் வந்திருந்ததைக் கண்டார். வந்த எண்ணுடன் உடனே தொடர்பு கொண்டார். மறுமுனையில் கைபேசியைக் கழிவறையில் தொலைத்துவிட்ட சிறுவனின் தந்தை திரு கேரி கோ,45, பேசினார்.

தொலைந்த கைபேசியைத் திரும்ப ஒப்படைக்கக் காத்திருந்த வெளிநாட்டு ஊழியர் திரு கருணாநிதியுடன் (இடது), கைபேசியைத் தொலைத்த சிறுவனின் தந்தை திரு கோ. படம்: வான் பாவ்