மலேசியாவின் ஜோகூரில் முவார் அருகே வடக்கு - தெற்கு விரைவுச் சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் மரணம் அடைந்த மூன்று சிங்கப்பூர் மாதர் களின் நல்லுடல்கள் ஞாயிற்றுக் கிழமை சுவா சூ காங் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டன. அவர்களின் 100க்கும் அதிக உறவினர்கள் திரண்டு இருந்து அந்த மூவருக்கும் பிரியாவிடை அளித்தனர். திருவாட்டி ஃபரிதா தம்ரோன், 63, அவரின் புதல்வி நூர் ஹசிமா முஸ்தபா, 21, இருவரும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டனர். அவர் களின் நல்லுடல்கள் முவார் மருத் துவமனையிலிருந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் கொண்டு வரப்பட்டன.
உறவினர்கள் சுமார் 70 பேர் இறுதிச் சடங்குகளில் பங் கெடுத்துக்கொண்டனர். திருவாட்டி ஃபரிதாவின் கணவர் முஸ்தபா யாசின், 63, திருவாட்டி நூர் ஹசிமாவின் கணவர் முகம்மது ஃபத்ரி, 23, இருவரும் அந்த விபத்தில் காயம் அடைந்தனர். அவர்கள் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. இந்த ஈமச்சடங்கு முடிந்ததும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்குத் திருவாட்டி ஹமிமா மம்மு என்ற வேறொரு சிங்கப் பூரரின் உறவினர்கள் சுமார் 50 பேர் இடுகாட்டிற்கு வந்தனர்.
முவார் அருகே, கம்புங் ஜயோரில் 10மீ. பள்ளத்தில் விழுந்து சிதைந்துவிட்ட பேருந்து. படம்: தி ஸ்டார்

