2016 ஆக வெப்பமான ஆண்டு

2016 ஆக வெப்பமான ஆண்டு

1 mins read
cead919b-db67-4d34-b1d9-7bf3b1766a5d
-

இந்த ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தக வலை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. சிங்கப்பூரின் வானிலை குறித்த விவரங்கள் 1929ஆம் ஆண்டி லிருந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு சிங்கப்பூரின் வெப்பநிலை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி இந்த ஆண்டின் சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சிய சாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1997, 1998, கடந்த ஆண்டு ஆகியவற்றின் போது பதிவான 28.3 டிகிரி செல்சியஸ்தான் ஆக உயர்வான வெப்பநிலையாக இருந்து வந்தது.