துப்பாக்கித் தோட்டாக்களை முகாமை விட்டு வெளியே கொண்டு வந்தவருக்கு தண்டனை

துப்பாக்கித் தோட்டாக்களை முகாமை விட்டு வெளியே கொண்டு வந்தவருக்கு தண்டனை

1 mins read

தயார்நிலை தேசிய சேவையாளர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் துப்பாக்கித் தோட்டாக்களை ராணுவ முகாமை விட்டு வெளியே கொண்டு வந்ததற்கு தண்டனை பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் மூன்றாம் சார்ஜண்ட் ஜேரட் மோக் ‌ஷி ஜி எனும் அந்த 22 வயது ஆடவர், 5.56 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட 10 துப்பாக்கித் தோட்டாக்களைத் தமது பைக்குள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.

இந்தச் செயலுக்காக ஜேரட் மீது ராணுவ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, 16 வாரங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி கிறது. ராணுவ முகாமை விட்டு துப் பாக்கித் தோட்டாக்களை ஜேரட் எப்படி வெளியே கொண்டு வந்தார் என்ற விவரம் கிடைக்கவில்லை. சிங்கப்பூர் ஆயுதப்படையில் உள்ள ராணுவ வீரர்கள் பயன்படுத் தும் SAR-21 நீள் துப்பாக்கியில் இந்த 5.56 மில்லி மீட்டர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படும். அனுமதியின்றி ஆயுதங்க ளையோ தோட்டாக்களை வைத்தி ருக்கும் செயலை சிங்கப்பூர் ஆயு தப்படை கடுமையான குற்றமாக வகைப்படுத்தியுள்ளது என்று தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

ஆயுதங்களையும் தோட்டாக்க ளையும் 'விநியோகித்தல், பயன் படுத்துதல், மீட்டுக் கொள்ளுதல்' ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை கடுமையான விதிமுறை களை வகுத்து வைத்துள்ளது என் றும் தற்காப்பு அமைச்சு கூறியது.