பேருந்து ஓட்டுநர்கள் மீது தாக்குதல்: சந்தேக நபர் தெரிந்தது

பேருந்து ஓட்டுநர்கள் மீது தாக்குதல்: சந்தேக நபர் தெரிந்தது

1 mins read

புத்தாண்டுக்கு முதல் நாளன்று பேருந்து ஓட்டுநர்கள் மூன்று பேரைத் தாக்கிய சீன ஆடவரைப் பிரத்தியேக படச்சாதனங்கள் அடையாளம் கண்டுவிட்டன. பேருந்து ஓட்டுநர்கள் மூவரும் சனிக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணிக்குத் தாக்கப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்தது. பேருந்து ஓட்டுநர்களைத் தாக் கிய ஆடவர் பார்ட்லி ரோட்டில் சேவை எண் 93 பேருந்திலும் சேவை எண் 129 பேருந்துகள் இரண்டிலும் ஏறி, அந்தப் பேருந்து களின் ஓட்டுநர்களை அறைந்தார், தாக்கினார். தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் இரண்டு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருக் கிறது என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது. "எங்கள் ஊழியர்கள் இப்படி தாக்கப்படுவதை நாங்கள் சகித் துக்கொள்ளவே மாட்டோம். "இத்தகைய காரியங்களை மிகவும் கடுமையானவையாக நாங் கள் கருதுகிறோம். வேண்டு மென்றே பேருந்து ஓட்டுநர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். "குற்றம் செய்தவர் பிடிபடுவதை உறுதிப்படுத்த எங்களால் ஆன அனைத்தையும் நாங்கள் நிச்சயம் செய்வோம். "இதன் தொடர்பில் நாங்கள் போலிசுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்," என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.