தூண்டில் முள்ளுடன் தாய் நீர்நாய்

தூண்டில் முள்ளுடன் தாய் நீர்நாய்

1 mins read
439582bf-964b-430c-9f28-c9b7ec0f1cc2
-

பீஷானில் பிரபலமான நீர்நாய் களுக்குத் தாய் என்று நம்பப் படும் ஒரு நீர்நாய் அதன் உடலில் தூண்டில் முள்ளுடன் காணப்பட்டது. ஓராண்டு காலமாக நீர்நாய்களைக் கண்காணித்து வரும் பேட்ரிக் இங், 60, என்பவர் தான் நீர்நாய்களை மரீனா பே மிதக் கும் மேடையில் காணொளிப் படம் எடுத்ததாகவும் அவற்றை வீட்டில் போட்டுப் பார்த்தபோது தூண்டில் முள்ளும் நரம்பும் ஒரு நீர்நாய் உடலில் தெரிந்ததாகவும் குறிப்பிட்டார். அந்த மிதக்கும் மேடையைச் சுற்றிலும் நீர்நாய்கள் நீந்தி விளையாடி கொண்டிருக்கும் போது ஏராளமானவர்கள் அந்த இடத்தில் தூண்டில் போடுவதைத் தான் பார்த்திருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.