பூன் லே வட்டாரத்தில் நேர்ந்த சாலை விபத்து ஒன்றில் 72 வயது ஆடவர் மாண்டார். சம்பவம் தொடர்பில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) கனரக லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பூன் லே டிரைவ் புளோக் 190க்கி அருகில் கனரக வாகனமும் பாதசாரியும் சம்பந்தப்பட்ட விபத்து நேர்ந்தது குறித்து காவல்துறைக்கு காலை 7.20 மணியளவில் தகவல் கிடைத்தது.
அதையடுத்து சுயநினைவு இழந்த நிலையில் 73 வயது ஆடவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவர் பின் மாண்டதைக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் உறுதிப்படுத்தின.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததாக 48 வயது லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

