முதியவரைக் காணவில்லை; தகவல் நாடும் காவல்துறை

1 mins read
8b4490aa-60e3-4059-9bc6-8fa0db36a32e
73 வயது லுவான் ஆ பின். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

டிசம்பர் 7ஆம் தேதி, பிற்பகல் 2.20 மணிக்கு எண் 17 பெட்டீர் ரோட்டில் கடைசியாகக் காணப்பட்ட 73 வயது லுவான் ஆ பின் எனும் முதியவரைக் காணவில்லை.

இவர் குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு உடனடியாகத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காணாமற்போன அன்று சாம்பல் நிற டி-சட்டையையும் கறுப்பு நிறக் கால்சட்டையையும் இவர் அணிந்திருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

தகவல் அறிந்தோர் 1800-255-0000 எனும் எண்ணில் காவல்துறையுடன் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையப்பக்கத்தில் தகவல் தெரிவிக்கலாம். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்