மலேசியா கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் நடப்பிற்கு கொண்டு வந்த 20 ரிங்கிட் சாலைக் கட்டணத்துக்கு நிகராக சிங்கப்பூரும் கூடுதல் கட்டணம் விதிக்கும் என போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிங்கப்பூரிலிருந்து உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைந்த சிங்கப்பூர் வாகனங்கள் கடந்த நவம்பர் 1 முதல் டிசம்பர் 20 வரை கிட்டத்தட்ட 13.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய சாலைக் கட்டணங்களைச் செலுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் வாகனங்கள் செலுத்திய சாலைக் கட்டணங் களின் மொத்த தொகை எவ்வளவு என்றும் சிங்கப்பூருக்கு வரும் வாகனங்கள் மீதும் இனி சாலைக் கட்டணங்கள் விதிக்கப்படுமா என்றும் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். மலேசியாவுக்குச் செல்லும் வாகனங்கள்மீது விதிக் கப்படும் தீர்வை அல்லது சாலைக் கட்டணத்துக்கு நிகராக சிங்கப்பூரும் கட்டணம் விதிக்கும் நீண்டகால கொள்கை இங்கு உள்ளது என்று விவரித்த திரு கோ, இங்கு விதிக்கப்படவிருக்கும் கட்டணம் விரைவில் அறிவிக்கப் படும் என்றார்.

