டாக்சி மீது விழுந்து கண்ணாடியை நொறுக்கிய மரம்

டாக்சி மீது விழுந்து கண்ணாடியை நொறுக்கிய மரம்

1 mins read
aa8fd92d-752a-440b-9c71-d5c4251719d7
-

இடி மின்னலுடன் பெய்த மழையால் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் டாக்சி சேதமடைந்தது. மத்திய விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ‌ஷின் மின் டெய்லி செய்தி தெரிவிக்கிறது. சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிய சாலையின் அங் மோ கியோ அவென்யூ 5ஐ நோக்கிய வெளிவழியில் அந்த டாக்சியை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டு இருந்தபோது மரம் விழுந்ததாக ஜாங் என்னும் பெயர் கொண்ட டாக்சியோட்டி தெரிவித்தார். அப்போது பெண் பயணி ஒருவர் பின்னிருக்கையில் அமர்ந்திருந்ததாக வும் டாக்சி மீது மரம் பெரிய சத்தத் துடன் விழுந்ததாகவும் அந்த 57 வயது ஆடவர் குறிப்பிட்டார்.

சேதமுற்ற டாக்சி. படம்: ‌ஷின் மின் வாசகர்