முஸ்தபா சென்டர் பேரங்காடி கடைத் தொகுதியின் சிங்கப்பூர் பிளாசா கிளை பிப்ரவரியில் மூடப்பட இருப் பதால் அந்தக் கிளையில் உள்ள விற் பனைப் பொருட்களையும் ஊழியர் களையும் சையது ஆல்வி ரோட்டில் உள்ள முஸ்தபா சென்டருக்கு மாற்றும் பணி நடந்துவருகிறது. 'பீச்சர் டெவலப்மெண்ட்' என்னும் நிறுவனத்தால் வாங்கப்பட்ட சிராங் கூன் பிளாசா கட்டடம் அடுத்த மாதம் இடிக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் 19 மாடி கொண்ட 'சென்டிரியம் ஸ்குவேர்' என்னும் புதிய கட்டடம் எழுப்பப்பட உள்ளது. அலுவலகம், மருத்துவம், சில்லறைக் கடைகள் போன்றவை அந்தப் புதிய கட்டடத்தில் இடம்பெறும்.
சிராங்கூன் பிளாசா கட்டடத்தில் 'முகமது முஸ்தபா அண்ட் சம்சுதீன்' கடை தவிர்த்த இதர வாடகைதாரர் களும் அடுத்த மாதம் முற்பகுதியில் வெளியேற இருப்பதாக உறுதிப் படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. முஸ்தபா கிளை முகப்பில், அந்தக் கடை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மூடப்படும் என்ற அறிவிப்பு ஒட்டப் பட்டுள்ளது. கடந்த 1985ஆம் ஆண்டு முதல் சிராங்கூன் பிளாசாவில் கிட்டத்தட்ட 65,000 சதுர அடியில், அதாவது அக்கட்டடத்தின் சுமார் 70 விழுக் காட்டுப் பகுதியில் முஸ்தபா கிளை இயங்கி வந்தது.

