ஃபால்கன் வங்கிக் கிளையின் முன்னாள் நிர்வாகிக்கு சிறை, அபராதம்

ஃபால்கன் வங்கிக் கிளையின் முன்னாள் நிர்வாகிக்கு சிறை, அபராதம்

1 mins read
d033093c-a260-4e06-99e3-26acf10b2626
-

ஃபால்கன் தனியார் வங்கியின் சிங்கப்பூர் கிளை முன்னாள் நிர்வாகிக்கு நேற்று 28 வார சிறைத் தண்டனையும் $128,000 அபராதமும் விதிக்கப்பட்டன. சுவிட்சர்லாந்து நாட்டவரான ஜென்ஸ் ஃபிரெட் சுடுர்ஸெநே கர், 42, (படம்) என்னும் அவர் மலேசியாவின் 1எம்டிபி தொடர் பாக சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விசாரணையின்போது தம் மீது தொடுக்கப்பட்ட ஆறு குற்றச் சாட்டுகளை ஒப்புக்கொண்டார். 1எம்டிபி விவகாரத்தில் சிங் கப்பூரில் தண்டிக்கப்படும் முதல் வெளிநாட்டவர் இவர்தான். இவரையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேரிடம் விசாரணை நடைபெற்றது.

பில்லியன் டாலர் தொடர்பி லான குற்றத்திற்குரிய பரிவர்த் தனையாகத் தோன்றிய விவரங் களைத் தெரிவிக்காமல் இருந் தது, மலேசிய வர்த்தகர் லே டேக் ஜோவைப் பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகளிடம் பொய் பேசியது உள்ளிட்டவை ஜென்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுள் அடங்கும். ஃபால்கன் வங்கியில் பணி யாற்றுகையில் கடந்த 2013ஆம் ஆண்டு அவ்வங்கியின் இரண்டு கணக்குகளுக்கு வந்த 1.262 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வரவு வைத்தபோது சிங்கப்பூர் நாணய ஆணையத் தின் வழிமுறைகளை ஜென்ஸ் பின்பற்றத் தவறினார்.