போலிசாக நடித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறை, பிரம்படி

போலிசாக நடித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறை, பிரம்படி

1 mins read

தம்மை போலிஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு 11 வயது பள்ளிச் சிறுமியைக் கடத்தி, பாலியல் துன்பம் விளைவித்த குற்றத்துக்காக 43 வயது ஆடவர் ஒருவருக்கு நேற்று சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. லியு டியன் சை எனப்படும் அவர் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் காலாங்கில் உள்ள சரக்குக்கிடங்கில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கடத்தல் குற்றத்துக்கு ஈராண்டு சிறையும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்கு ஆறாண்டு சிறை. மூன்று பிரம்படிகள் ஆகியனவும் ஆள்மாறாட்ட குற்றத்துக்கு நான்கு மாதச் சிறையும் அவருக்கு விதிக்கப்பட்டன.