தனது நாட்டுக்குள் நுழையும் வாகனங்களுக்கான சாலைக் கட்டணத்துக்கு இணையாக கட் டணம் விதிக்கும் முடிவை சிங்கப்பூர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மலேசிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கு 20 ரிங்கிட் சாலைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த நவம் பரில் இந்தக் கட்டணம் அறிமுகம் கண்டது. இந்தக் கட்டணத்துக்கு இணையாக சிங்கப்பூரும் கட் டணம் விதிக்க எண்ணியிருப்ப தாகவும் அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிங் கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கடந்த திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் தெரி வித்திருந்தார்.
சிங்கப்பூரிலிருந்து உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைந்த சிங்கப்பூர் வாகனங்கள் கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 13.9 மில்லி யன் ரிங்கிட் மதிப்புடையசாலைக் கட்டணங்களைச் செலுத்தியுள்ள தாக அவர் கூறினார். மலேசியாவுக்குச் செல்லும் வாகனங்கள் மீது விதிக்கப்படும் தீர்வை அல்லது சாலைக் கட் டணத்துக்கு நிகராக சிங்கப் பூரும் கட்டணம் விதிக்கும் நீண்டகால கொள்கை இங்கு உள்ளது என்று திரு கோ விவ ரித்திருந்தார். ஆனால், இந்தப் புதிய கட்டண விதிப்பு பற்றி சிங்கப் பூர் மறுபரிசீலனை செய்யவேண் டும் என்று மலேசிய போக்கு வரத்து அமைச்சர் லியோவ் டியோங் லாய் கேட்டுக்கொண்டு உள்ளார்.

