கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரை, அந்நிறுவனத்தில் வாட கைக்கு எடுத்த காரைக்கொண்டே மோதச் செய்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு தெலுக் பிளாங் காவில் நிகழ்ந்தது. 'எலீட்டெஸ் கார் ரென்டல்' எனும் அந்த நிறுவனத்திலிருந்து 'ஹோண்டா' காரை வாடகைக்கு எடுத்தார் ஓர் ஆடவர். ஆயினும், அத்துறை சார்ந்த இணையப் பக்கத்தில் அவரைப் பற்றி நல்ல விதமாகக் கூறப்படவில்லை என் பதால் அவரது காரைப் பின்தொ டர்ந்தார்
அந்நிறுவனத்தின் ஊழி யர்களில் ஒருவரான ஸெங், 20. ஒருவழியாக அந்த 'ஹோண்டா' காரை அடைந்ததும் அதைப் புகைப்படம் எடுப்பதற்காகவும் அந்த காரில் இருந்தவர்களைக் கீழிறங்கச் சொல்வதற்காகவும் தமது வாகனத்திலிருந்து இறங்கி னார் திரு ஸெங். ஆனால், அதன் ஓட்டுநர் காரால் திரு ஸெங்கை இடித்துத் தள்ளிவிட்டு காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதில் திரு ஸெங்கிற்குப் பலத்த காயமேதும் ஏற்படவில்லை. தற்செயலாக அந்தப் பக்கம் வந்த போலிஸ் கார் ஒன்று அந்த 'ஹோண்டா' காரை சுமார் ஐந்து கி.மீ. தூரம் விரட்டிச் சென்று பிடித்ததாக திரு ஸெங் கூறினார். காரினுள் ஒரு பாராங்கத்தியும் போதைப்பொருளாக இருக்கலாம் என நம்பப்படும் மருந்தையும் போலிஸ் கைப்பற்றியதாக அறியப் படுகிறது என்று 'ஷின்மின்' செய்தி தெரிவித்தது.

