வசதிகுறைந்த சிறார்களுக்காக 500,000 வெள்ளிக்கு மேல் நிதி திரட்டிய சுயசரிதை

வசதிகுறைந்த சிறார்களுக்காக 500,000 வெள்ளிக்கு மேல் நிதி திரட்டிய சுயசரிதை

2 mins read

அரசாங்க முன்னாள் மூத்த மேலதிகாரி ஃபிலிப் இயோவின் 'Neither Civil Nor Servant' எனும் தலைப்பைக் கொண்ட சுயசரிதை நூல் வெளியீட்டை முன்னிட்டு அரை மில்லியன் வெள்ளிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. திரு இயோ தலைவராக பொறுப்பு வகிக்கும் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி புத்தாக்க (இடிஐஎஸ்) நிறுவனம் திரட்டிய இந்நிதி, 'இடிஐஎஸ் கேர்ஸ்' எனும் நிறுவனத்தின் துணைப் பிரிவின்வழி வசதிகுறைந்த சிறார் களுக்கு உதவ பயன்படுத்தப் படும். நன்கொடை மற்றும் நூல் வெளியீட்டு விற்பனையின் மூலம் திரட்டப்பட்ட இந்த நிதி, அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 சிறார் களைச் சென்றடைவதற்கு தேவை யான திட்டங்களை விரிவாக்கம் செய்ய 'இடிஐஎஸ் கேர்ஸ்' பிரி வுக்கு கைகொடுக்கும். 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்' பதிப்பகம் பிரசுரித்த இந்நூலை எழுத்தாளர் பே ‌ஷிங் ஹுவெய் எழுதியுள்ளார்.

பொருளியல் வளர்ச்சிக்கழக முன்னாள் தலைவர் திரு இயோ வின் அரை நூற்றாண்டு பணியை பதிவுசெய்கிறது இந்நூல். தாராளமாக நன்கொடை வழங்கப்படுவதற்கு இந்த நூல் உந்துசக்தியாக விளங்கியது தமக்கு திருப்தி அளிப்பதாக திரு இயோ, 70, கூறினார். கடந்த நவம்பர் 11ஆம் தேதி வெளிவந்த இந்த நூல் வாச கர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'தி சண்டே டைம்ஸ்' நாளிதழிலும் பிரதான புத்தகக் கடைகளிலும் உள்ள சிறப்பாக விற்பனையாகும் நூல் பட்டியலில் இந்த நூல் முதலிடத்தைப் பிடித் துள்ளது. வெளியிடப்பட்ட ஒரு மாதத் தில் மறுபதிப்பு பெற்ற இந்நூல், கூடிய விரைவில் 10,000 பிரதிகள் விற்பனை அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.