75% அதிகமான குடும்பங்கள் சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டன

1 mins read
f5606799-6a04-4f19-8e22-9e8748bc231d
கடந்த மே 13ஆம் தேதி முதல் 500 வெள்ளி சிடிசி பற்றுச்சீட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் 500 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டன.

இதன் மூலம் 75 விழுக்காட்டுக்கு அதிகமான குடும்பங்கள் சிடிசி பற்றுச்சீட்டுகளை வாங்கி உள்ளன.

கடந்த மே 13ஆம் தேதி முதல் அந்த சிடிசி பற்றுச்சீட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவும் குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள வர்த்தகங்களுக்கு உதவும் எண்ணத்திலும் இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்த 500 வெள்ளிப் பற்றுச்சீட்டுக்கும் 1.33 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் தகுதிபெற்றுள்ளன.

பொதுமக்கள் சிடிசி பற்றுச்சீட்டுகளை எளிதாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாக வர்த்தக, தொழில் அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

“2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 1.99 பில்லியன் வெள்ளி மதிப்பிலான சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

“இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம்வரை மட்டும் 398 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

“அவற்றில் 185 மில்லியன் வெள்ளி குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள உணவங்காடிகள் மற்றும் கடைகளில் செலவிடப்பட்டுள்ளன. 213 மில்லியன் வெள்ளி பேரங்காடிகளில் செலவிடப்பட்டுள்ளன,” என்று மூத்த துணை அமைச்சர் லிங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்