வருமான வரி செலுத்துவோரில் பத்தில் எட்டுப் பேர் இவ்வாண்டு வருமான வரித் தாக்கல் செய்ய தேவையில்லை என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருமான வரி செலுத்துகின்றனர்.
வேலைவாய்ப்பு வருமானம் தொடர்பில் தானாகவே சேர்க்கப்படும் திட்டத்தில் 100,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன. முன்கூட்டிய வருமான வரித் தாக்கலுக்கு இத்திட்டம் அனுமதிக்கிறது.
கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் வருமான வரித் தாக்கல் செய்ய தேவையில்லை. ஆனாலும், தானாகவே சேர்க்கப்பட்ட தங்களது வருமானம் குறித்த தகவலையும் ஏதேனும் வரிச்சலுகைக்குத் தாங்கள் தகுதிபெற்றுள்ளோமா என்பதையும் அவர்கள் சரிபார்த்துக்கொள்ளுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தங்கள் ஊழியர்களின் வருமானம் குறித்த விவரங்களை வரும் மார்ச் 1ஆம் தேதிக்குள் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

