சாம்சுங் நிறுவனத்தில் வேலை செய்து வந்த டான் ஜியா வெய் என்னும் 31 வயது ஆடவர் கடன் பிரச்சினைகள் காரணமாக அலுவலகத்தில் இருந்து 61,000 வெள்ளி மதிப்பிலான கைப்பேசிகளைத் திருடியுள்ளார்.
ஆடவர் மீதான குற்றம் இன்று (பிப்ரவரி 20) நிரூபிக்கப்பட்டு, 8 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டான் சட்டவிரோதமாக கடன் வாங்கி, அதைத் திருப்பி அடைக்கமுடியாமல் போனதால் அலுவலகத்தில் இருந்து கைத்தொலைபேசிகளை திருடியுள்ளார்.
திருடிய கைப்பேசிகளை அவர் மறுவிற்பனை செய்தார்.
டான் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சாம்சங் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் அவர் மாதம் 5,300 வெள்ளி ஊதியமாகப் பெறுவதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
2022 ஜூலை மாதம் டான் கிட்டத்தட்ட 20 கைப்பேசிகளைத் திருடி மறுவிற்பனை செய்துள்ளார்.
அதன்பின்னர் அடிக்கடி ஆடவர் திருட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளார்.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கையின்போது 289 கைபேசிகள் காணாமல் போனது தெரியவந்தது.
அதைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் டான் நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டார்.
அதன் பின்னர் நடந்த நீதிமன்ற விசாரணையில் டான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

