பூன் லே வட்டாரத்தில் திங்கட்கிழமை (ஜூன் 16) நிகழ்ந்த விபத்தில் எட்டு வயது சிறுமி உட்பட மூவருக்கு காயம் ஏற்பட்டது.
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட அந்த விபத்து அப்பர் ஜூரோங் ரோட்டு, பையினர் ரோடு நார்த் சந்திப்பில் காலை 9.50 நிகழ்ந்தது.
விபத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையும் தெரிவித்தன.
31 வயது மோட்டார் சைக்கிளோட்டி, 34 வயது பெண் கார் ஓட்டுநர், அதே காரில் பயணம் செய்த 8 வயது சிறுமி ஆகியோர் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணை தொடர்பில் கார் ஓட்டுநர் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.