தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

83 வயது மாதுமீது கார் மோதி விபத்து

1 mins read
756b3f3b-f08d-4bf0-ab76-5d73e73ede47
சுவா சூ காங் லிங்க் - சுவா சூ காங் நார்த் 6 சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. - படம்: ஷின் மின் நாளிதழ்

சுவா சூ காங்கில் திங்கட்கிழமை சாலைச் சந்திப்பைக் கடக்க முற்பட்ட 83 வயது மாதுமீது கார் மோதியது.

இந்த விபத்து குறித்து திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் தகவல் கிடைத்தது எனவும் சுவா சூ காங் லிங்க் - சுவா சூ காங் நார்த் 6 சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது எனவும் காவல்துறை தெரிவித்தது.

அந்த மாது, கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுயநினைவோடு இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர்மீது மோதிய காரின் ஓட்டுநரான 54 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருகிறார்.

கார் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எறிவதற்கு சிறிது நேரம் முன்பாகத்தான் சந்திப்பிற்கு வந்ததாகவும் பாதசாரிமீது மோதியவுடன் அது நின்றதாகவும் சொல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்