தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிற்றுந்து மோதி 84 வயது முதியவர் மரணம்

1 mins read
c77cce48-c854-4f34-83b0-4f1b2c74a0b1
சுவா சூ காங் அவென்யூ 1, சுவா சூ காங் சென்ட்ரல் சந்திப்பில் ஏற்பட்ட விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட காணொளி பரவலாக வலம் வருகிறது. - படம்: ஃபேஸ்புக்

திங்கட்கிழமை (மே 26) நேர்ந்த விபத்து ஒன்றில் 84 வயது முதியவர் மாண்டார்.

இதைத் தொடர்ந்து விபத்து தொடர்புடைய சிற்றுந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிக் கூறும் காவல்துறையினர், சுவா சூ காங் அவென்யூ ஒன்று, சுவா சூ காங் சென்ட்ரல் சந்திப்பில் காலை 6.15 மணிக்கு விபத்து தொடர்பான தகவல் தங்களுக்குக் கிடைத்தது என்று கூறினர்.

விபத்தில் மாண்ட பாதசாரி விபத்து நடந்த இடத்திலேயே மாண்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் விபத்துக்கு காரணமான 53 வயது சிற்றுந்து ஓட்டுநர் கவனமின்றி வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட காணொளி சாலையின் வலக்கோடி தடத்தில் காவல்துறை வாகனம், சிற்றுந்துக்கு இடையே காவல்துறையின் நீல நிறக் கூடாரம் வைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

காணொளியில் சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஒருவரிடம் பேசுவது தெரிகிறது. அருகே பல காவல்துறை மோட்டார்சைக்கிள்கள் வலக்கோடித் தடத்தில் சாலை நடுவே உள்ள தடுப்புக்குப் பக்கத்தில் காணப்பட்டன.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்