மின்னல் வேகத்தில் வந்த மின்சார மிதிவண்டி (PAB) மோதி 84 வயது மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார்.
தானா மேரா கெச்சில் ரோட்டை நோக்கிச் செல்லும் பிடோக் சவுத் அவென்யூ 3ல் ஜனவரி 30ஆம் தேதியன்று பிற்பகல் 3.20 மணியளவில் நடந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
பாதசாரியான மூதாட்டி சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார் என்று காவல்துறை உறுதிப்படுத்தியது.
43 வயது மின்சார மிதிவண்டி ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார். விசாரணை இன்னும் தொடர்கிறது.
ஜூன் 1ஆம் தேதி முதல் இந்த வாகனத்தின் வேக வரம்பு 60 கிலோமீட்டர் என்பதில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு குறைக்கப்படும். மேலும், அன்றைய தேதியிலிருந்து விற்கப்படும் நடமாட்ட உதவி ஸ்கூட்டர்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

