தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்ணாடியிழைக் கம்பிவட செயலிழப்பு: 850 வீடுகளில் இணையச் சேவை பாதிப்பு

1 mins read
b36bc861-96b5-49a5-81e5-ed73acda1811
சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1, மைரிபப்ளிக் ஆகிய இணையச் சேவை வழங்குநர்களுக்கு கண்ணாடியிழைக் கம்பிவடக் கட்டமைப்பை நெட்லிங்க் டிரஸ்ட் நிறுவனம் அமைத்துத் தருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கண்ணாடியிழைக் கம்பிவடச் செயலிழப்பால் இயோ சூ காங், சிராங்கூன் பகுதிகளில் இருக்கும் 850 வீடுகளில் வியாழக்கிழமை இணையச் சேவை பாதிக்கப்பட்டது என்று தொலைத்தொடர்பு நிறுவனமான நெட்லிங்க் டிரஸ்ட் விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.

சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1, மைரிபப்ளிக் ஆகிய இணையச் சேவை வழங்குநர்களுக்கு கண்ணாடியிழைக் கம்பிவடக் கட்டமைப்பை அமைத்துத் தரும் நிறுவனம் நெட்லிங்க் டிரஸ்ட். அந்நிறுவனம், நிலத்தடியில் அமைத்திருந்த கம்பிவடக் கட்டமைப்பை மூன்றாம் தரப்பு ஒப்பந்தக்காரர்கள் சேதப்படுத்திவிட்டதாகத் தெரிவித்தது.

“அந்தப் பகுதிகளில் கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்ணாடியிழைக் கம்பிவடங்கள் சேதமடைந்தன. அந்த ஒப்பந்ததாரரை நாங்கள் பணிக்கு நியமிக்கவில்லை,”என அந்நிறுவனம் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மேலும், “இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறாம். அந்தக் கம்பிவடங்களைச் சேதப்படுத்திய மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” எனவும் அந்த நிறுவனம் சொன்னது.

கண்ணாடியிழைக் கம்பிவடத்தில் ஏற்பட்டச சேதங்கள் இரவு 9.13 மணிக்குச் சரிசெய்யப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான சேவையை விரைவில் மீட்டெடுக்கச் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்துப் பணியாற்றி வருகிறோம் எனவும் அந்நிறுவனம் இரவு 9.15 மணிக்கு விடுத்த மற்றோர் அறிக்கையில் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பயனர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட இணையச் சேவை வழங்குநர்களை அழைக்கலாம் என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்