செப்டம்பர் 30 அன்று ஹவ்காங்கில் ஒரு தனிநபர் நடமாட்ட சாதனத்துடன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 88 வயது பெண் பாதசாரி ஒருவர் பின்னர் மரணமடைந்தார்.
செப்டம்பர் 29ஆம் தேதி காலை சுமார் 7.55 மணியளவில் ஹவ்காங் ஸ்திரீட் 91ஐ நோக்கிச் செல்லும் ஹவ்காங் ஸ்திரீட் 51ல் உதவி கோரி ஓர் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மருத்துவமனைக்குப் பாதசாரி கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அதே நாளன்று மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
49 வயது நிரம்பிய தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் ஓட்டுநர் விசாரணையில் காவல்துறைக்கு உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 1ஆம் தேதி Singapore roads accident.com என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளைக் கோரும் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. இதை 40க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.

