சிங்கப்பூரில் 90 மீட்டர் நீள சொகுசுக் கப்பல் - யாருடையது ?

சிங்கப்பூரில் 90 மீட்டர் நீள சொகுசுக் கப்பல் - யாருடையது ?

1 mins read
8b983348-d79a-4500-8811-52362166e556
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 90 மீட்டர் நீளம் கொண்ட சொகுசுக் கப்பல் ஒன்று நங்கூரமிட்டுள்ளது.

அந்த சொகுசுக் கப்பலின் பெயர் டார் என்றும் அது ர‌ஷ்ய பெருஞ்செல்வந்தர் ஸியாத் அல் மனாஸிருக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

சொகுசுக் கப்பல் கெப்பல் பேவில் உள்ளது.

சொகுசுக் கப்பல் இத்தாலியில் இருந்து 4 வாரக் கடல் பயணத்திற்குப் பிறகு பிப்ரவரி 18ஆம் தேதி சிங்கப்பூர் வந்தது.

கப்பலுக்குள் 57 வயது மனாஸிர் இருந்தாரா இல்லையா என்பது பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

ர‌ஷ்யா-உக்ரேன் போர் தொடங்கியபோது அமெரிக்கா 198 ர‌ஷ்யர்கள்மீது தடைகள் விதிக்கத் திட்டமிட்டிருந்தது. அதில் மனாஸிர் பெயரும் இருந்தது.

இருப்பினும், மனாஸிர் எந்தத் தவறும் செய்யாத காரணத்தால் அவர்மீது அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.