தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் தனியார் வீடுகளில் தங்குவோர் வரம்பு 91 தனியார் வீடுகளில் மீறப்பட்டது

2 mins read
667af3fb-d667-4436-8020-6aa4924a3d6f
சென்ற ஆன்டு ஜனவரி 22 முதல் அக்டோபர் 31 வரை, தனியார் குடியிருப்புகளில் தங்குவோருக்கான அதிகபட்ச வரம்பு மீறப்பட்டதாகச் செய்யப்பட்ட 415 புகார்களின் தொடர்பில் நகர மறுசீரமைப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 9 மாதக் காலகட்டத்தில் தனியார் வீடுகளில் தங்குவோருக்கான அதிகபட்ச வரம்பு 91 தனியார் குடியிருப்புகளில் மீறப்பட்டது.

அவற்றில் இரண்டு வீடுகள், வீட்டு வாடகைச் சந்தையின் சூட்டைத் தணிக்க தற்காலிகமாகத் தளர்த்தப்பட்ட வரம்பை மீறின.

சென்ற ஆன்டு ஜனவரி 22 முதல் அக்டோபர் 31 வரை, தனியார் குடியிருப்புகளில் தங்குவோருக்கான அதிகபட்ச வரம்பு மீறப்பட்டதாகச் செய்யப்பட்ட 415 புகார்கள் தொடர்பில் நகர மறுசீரமைப்பு ஆணையம் விசாரணை நடத்தியதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்துக்கான எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தார்.

89 குடியிருப்புகள் வழக்கமான ஆறு பேர் தங்குவதற்கான வரம்பை மீறியதாக அவர் கூறினார். விதிகள் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டபோது அனுமதிக்கப்பட்ட எட்டு பேர் தங்குவதற்கான வரம்புக்குப் பதிவுசெய்த இரண்டு வீடுகள் அதை மீறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான் கேட்ட கேள்விகளுக்கு திரு லீ பதிலளித்தார்.

சென்ற ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி தனியார் வீடுகளில் தங்குவோருக்கான அதிகபட்ச வரம்பு தற்காலிகமாக நீக்கப்பட்டதிலிருந்து, தனியார் குடியிருப்புகளில் தொல்லை, அத்துமீறல் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை குறித்து திருவாட்டி டான் கேள்வி எழுப்பினார்.

தனியார், பொது வாடகைச் சந்தைகளில் வாடகைக் கட்டணம் வெகுவாக அதிகரித்ததைத் தொடர்ந்து, 90 சதுர மீட்டர் அல்லது அதற்கும் மேல் பரப்பளவு கொண்ட தனியார் வீடுகளுக்கு, தங்குவோருக்கான அதிகபட்ச வரம்பு நீக்கப்பட்டது.

90 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவைக் கொண்ட தனியார் வீடுகளுக்கு, தங்குவோரின் அதிகபட்ச வரம்பு ஆறாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்