விற்பனைப் பட்டியலிலிருந்து 959 சட்டவிரோத சுகாதாரப் பொருள்கள் அகற்றம்

விற்பனைப் பட்டியலிலிருந்து 959 சட்டவிரோத சுகாதாரப் பொருள்கள் அகற்றம்

2 mins read
8700c309-67dd-467f-ab40-2f666f30a022
சிங்கப்பூர் பயனர்களைக் குறிவைத்த ஏறத்தாழ 786 பட்டியல்கள் பதிவு செய்யப்படாத கான்டாக்ட் லென்ஸ்களின் தொடர்பானவை. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

சட்டவிரோத மருந்துகளைக் குறிவைத்து அனைத்துலகக் காவல்துறை தலைமையிலான இரண்டு வார கால அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இணைய விற்பனைப் பட்டியல்களிலிருந்து 959 சட்டவிரோத சுகாதாரப் பொருள்களை அகற்றியுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் வியாழக்கிழமையன்று (மே 7) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் பயனர்களைக் குறிவைத்த ஏறத்தாழ 786 பட்டியல்கள் பதிவு செய்யப்படாத கான்டெக்ட் லென்ஸ்கள் தொடர்பானவை. 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி வரை நடத்தப்பட்ட முந்தைய நடவடிக்கையில் அகற்றப்பட்ட இதுபோன்ற 167 பட்டியல்களைவிட இது அதிகமாகும்.

இணையம் மூலம் கான்டெக்ட் லென்ஸ்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

“கான்டெக்ட் லென்ஸ்கள் என்பவை மருத்துவச் சாதனங்களாகும். அவை தேவையான பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரமான தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய, ஆணையத்திடம் பதிவு செய்யப்பட வேண்டும்,” என்று கூறிய ஆணையம், பதிவு செய்யப்படாத கான்டெக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்தியதால் கடுமையான கண் பாதிப்புகள் ஏற்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

மார்ச் 10 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்ற அண்மை அதிரடி நடவடிக்கையில், சிங்கப்பூர் எல்லைகளிலிருந்து 6,641 யூனிட் சட்டவிரோத சுகாதாரப் பொருள்களை ஆணையம் பறிமுதல் செய்தது. இவற்றில் பெரும்பாலானவை அஞ்சல் சேவைகள் மூலம் இடைமறிக்கப்பட்டவை ஆகும்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் பெரும்பாலானவை வலி நிவாரணிகள் அல்லது மயக்க மருந்துகள் போன்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவைப்படும் மருந்துகளாகும். அத்துடன் ‘ஐவர்மெக்டின்’ போன்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகளும் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருள்களிலும் ‘ஐவர்மெக்டின்’ 30 விழுக்காடாக உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 2,000 யூனிட் சட்டவிரோத சுகாதாரப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்