தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்தை திரைப்படத்திற்குத் தினகனி விருது

1 mins read
f61d0b06-a53f-4be9-8fef-bc23669b261d
(இடமிருந்து) திருவாட்டி இந்திரா சுந்தரம், ஜாக்குவார் தங்கம், மில்லத் அகமது, தினகனி ஆசிரியர் கனிராஜா. - படம்: தினகனி

சென்னையிலிருந்து வெளிவரும் தினசரி காலை நாளிதழான தினகனி, தனது மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ் சமூகத்தின் சிறந்த சாதனையாளர்கள் மற்றும் சேவையாளர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி சிறப்பித்தது.

அதில், எழுத்தாளர் மில்லத் அகமது, ஆந்தை திரைப்படத்தில் பல்வேறு பணிகளைச் செய்ததற்காக, பல்முகக் கலைஞருக்கான தினகனி விருதைப் பெற்றார்.

விழா நிகழ்ச்சி ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் அருகிலுள்ள கடற்சிப்பந்திகள் சங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல திரைப்படச் சண்டைப் பயிற்சியாளரும், தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான கலைமாமணி ஜாக்குவார் தங்கமும் ஓய்வுபெற்ற சென்னை அண்ணாநகர் உதவி ஆணையர் திரு. கி. ராஜாராமும் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு வெளியான ஆந்தை திரைப்படத்தில், அறிமுகப் படத்திலேயே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், பாடலுக்குக் குரல், டப்பிங், நடனம், நடிப்பு, தயாரிப்பு, இணை இயக்கம் எனப் பத்துத் துறைகளில் தனது பங்களிப்பைச் செய்த சாதனையைப் பாராட்டி, மில்லத் அகமதுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ஒரு திரைப்படத்தில் பன்முகத் திறனை வெளிப்படுத்திய அவரது சாதனை இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்