தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் சுமார் 20 பேர் அரசியலில் இருந்து ஓய்வு

2 mins read
256ad954-1b73-4a2f-85b9-bf508ebdc021
ஓய்வு பெறும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் (வலச்சுற்றாக) டாக்டர் இங் எங் ஹென், போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், பீஷான்-தோ பாயோ உறுப்பினர் சோங் கீ ஹியோங், சுவா சூ காங் குழுத்தொகுதி உறுப்பினர் டான் வீ ஆகியோர் தாங்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளனர். - படம்: ஃபேஸ்புக்

மக்கள் செயல் கட்சி (மசெக) உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 20 பேர் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளனர்.

இவர்களில் நால்வர் ஏற்கெனவே தாங்கள் ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

இவர்களில் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், இரு முறை பதவி வகித்துள்ள சோங் கீ ஹியோங், ஆகிய இருவரும் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி உறுப்பினர்களாவர்.

இவர்கள் தவிர போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சரும் ஹோங் கா நார்த் உறுப்பினருமான திருவாட்டி ஏமி கோர், சுவா சூ காங் குழுத்தொகுதியில் ஒரு தவணை நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட டான் வீ என்பவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நால்வருக்கும் மாற்றாக கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்புகளில் புதுமுகங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், மக்கள் செயல் கட்சி ஏப்ரல் 17ஆம் தேதி தான் என்றுமில்லாத அளவாக 32 புதுமுகங்களை தேர்தலில் களமிறக்கப் போவதாக அறிவித்தது.

தற்போதைய நிலையில், மக்கள் செயல் கட்சி 79 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் 32 புதிய முகங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஆறு மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவர் என்று தெரிகிறது.

இவர்களில் தேர்தலில் போட்டியிடுவர் என்று உறுதியாகத் தெரிவது ஹவ்காங் தொகுதியில் முன்னர் போட்டியிட்ட லீ ஹோங் சுவாங் தற்பொழுது ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் களமிறக்கப்படுகிறார்.

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் முன்னர் மக்கள் செயல் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட அலெக்ஸ் இயோ இந்த முறை பொத்தோங் பாசிர் தனித் தொகுதியில் போட்டியிடுவார். திருவாட்டி சான் ஹுவி யு, டாக்டர் லாம் பின் மின் ஆகிய இருவரும் முறையே அல்ஜுனிட், செங்காங் குழுத்தொகுதிகளில் போட்டியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மக்கள் செயல் கட்சிநாடாளுமன்ற உறுப்பினர்கள்இங் எங் ஹென்