பாழான கார்ட்லைஃப் ரத்த அலகுகள்: சட்ட இழப்பீடுகளை ஆராயும் கூட்டத்தில் பெற்றோர் கலந்துகொண்டனர்

1 mins read
2e858629-25e1-4008-b0d3-08f18895554f
சரியான முறையில் சேமித்துவைக்காததால், ‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தில் இதுவரை ஏறக்குறைய 7,500 தொப்புள்கொடி ரத்த அலகுகள் பாழாகிவிட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியில் உள்ள குறைபாடுகளுக்குச் சட்டரீதியான உத்தேச இழப்பீடுகளை ஆராய, பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 400 பெற்றோர் மே 3ஆம் தேதி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டனர்.

சரியான முறையில் சேமித்துவைக்காததால், ‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தில் இதுவரை ஏறக்குறைய 7,500 தொப்புள்கொடி ரத்த அலகுகள் பாழாகிவிட்டன.

‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தில் 22 தொப்புள்கொடி சேமிப்புக் கலன்களில் ஏழின் வெப்பநிலை உகந்தநிலையில் இல்லாதது கடந்த நவம்பர் 30ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் செயல்முறைகள் அதிகமாகக் கவனிக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ‘விதர்ஸ் கட்டார்வோங்’ சட்ட நிறுவனத்தை அணுகியிருந்தன.

அந்தச் சட்ட நிறுவனத்தின் மூன்று பங்காளிகள் கூட்டத்தை வழிநடத்தின. கூட்டம், 18 குரோஸ் ஸ்திரீட் என்ற முகவரியில் அமைந்துள்ள சட்ட நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

பெற்றோர் இணையம் வழியாகவும் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்.

இரண்டரை மணிநேரத்திற்கும் மேலான துடிப்பான கலந்துரையாடல் நடைபெற்றதாக கலந்துகொண்டவர்கள் கூறினர். வழக்கறிஞர்கள் கூட்டத்தில் சட்ட ஆலோசனை வழங்காவிட்டாலும், சட்டத் தெரிவுகளின் தொடர்பில், கவலைப்படும் பெற்றோரின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்