சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 5 கிலோகிராம் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் 32 வயது சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) அன்று நடந்தது.
ஆடவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு 182,000 வெள்ளி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2 கிலோகிராம் கஞ்சா, 960 கிராம் போதைமிகு அபின், 130 கிராம் ஐஸ் போன்றவை அவற்றில் அடங்கும்.
2 கிலோகிராம் கஞ்சா என்பது ஏறத்தாழ 300 போதைப் புழங்கிகளுக்கு ஒருவாரம் பயன்படுத்த போதுமான ஒன்று என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புக்கிட் தீமா ரோட்டில் சொகுசுக் காரில் இருந்த போது ஆடவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஆடவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப்பொருள்கள் சிலவற்றைப் பறிமுதல் செய்தனர்.

