அங் மோ கியோவில் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சியும் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் காயமடைந்த சைக்கிளோட்டி டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து புதன்கிழமை (ஜூலை 8) பிற்பகல் 3.25 மணியளவில் அங் மோ கியோ அவென்யூ 10, அங் மோ கியோ அவென்யூ 1 சந்திப்பில் நிகழ்ந்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்போது 56 வயது சைக்கிளோட்டி சுயநினைவோடு இருந்தார் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
71 வயது டாக்சி ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருகிறார்.
விபத்து நடந்த இடத்தில் தற்காலிகமாகத் தடுப்புகளை வைத்து மூன்று அதிகாரிகள் போக்குவரத்தைச் சீரமைக்க உதவினர். விபத்தில் சிக்கிய சைக்கிள் மோசமாகச் சேதமடைந்தது.

