சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் புதன்கிழமை (ஜூன் 25) விபத்து நிகழ்ந்தது.
இரண்டு லாரிகள் விபத்துக்குள்ளாகின.
விபத்தில் சிக்கிய 34 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனையில் மாண்டார்.
அவர் விபத்துக்குள்ளான லாரி ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தவர்.
லாரிக்குள் மாட்டிக்கொண்ட அந்த ஆடவரைச் சிறப்புக் கருவிகள் கொண்டு அதிகாரிகள் லாரியிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.
அவர் பயணம் செய்த லாரியை ஓட்டிய 24 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கவனக்குறைவுடன் லாரி ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய மற்றொரு லாரியை ஓட்டிய 32 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இரு ஆடவர்களும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பிற்பகல் 1.55 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.