தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாம் இணைப்பு நெடுஞ்சாலையில் விபத்து

2 mins read
563bebee-7551-4138-8408-7a7e657ad6a8
மற்ற வாகனவோட்டிகள் அந்த காரைத் தாக்கியதில் அதன் முன் கண்ணாடியும் முன்பகுதியும் சேதமடைந்தன. - படம்: எஸ்ஜி விஜிலாண்டே ஃபேஸ்புக்

ஜோகூரில் உள்ள இரண்டாம் இணைப்பு நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக ‘யு-டர்ன்’ செய்ததால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சிங்கப்பூர் காரை ஓட்டிய 27 வயது ஓட்டுநர் மலேசியக் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மே 9ஆம் தேதி மாலையில் அந்த நெடுஞ்சாலையின் 0.6 கிலோமீட்டரில் நடந்த இச்சம்பவம், சாலையில் உள்ள ஓர் இரும்புத் தடுப்பில் உள்ள ஒரு திறப்பில் சிவப்பு நிற ‘மசெராட்டி’ கார் ‘யு-டர்ன் செய்தபோது இரும்புத் தடுப்பில் மோதியதால் நிகழ்ந்தது.

மோதலின் விளைவாக, இரும்புத் தடுப்புச் சுவர்கள் எதிர்த்திசையில் விழுந்ததால், நான்கு வாகனங்கள் மோதிக்கொண்டன.

சாலையின் இரும்புத் தடுப்புச் சுவரில் இருந்து விலகிச் சென்று இரும்பு இடிபாடுகளில் மோதியதில் 26 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டி உயிரிழந்ததாக மலேசிய நாளேடான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மே 10ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் விபத்தின் கார் கேமரா காட்சிகளின்படி, கார் சிங்கப்பூர் நோக்கி எதிர்த்திசையில் இடதுபுறப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பறந்து வந்த இரும்பு இடிபாடுகள் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைத் தாக்கியதைக் காண முடிந்தது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலையிலும் காலிலும் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

மேலும் பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் இடிபாடுகளில் மோதி, கீழே விழுந்தனர். ஆனால் அவர்கள் பெரிய அளவில் காயமடைந்ததாகத் தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்பு, சாலையைப் பயன்படுத்தும் பலர் மசெராட்டி ஓட்டுநரைத் தலைக்கவசத்தால் தாக்கியதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எம். குமரேசன் தெரிவித்தார்.

எஸ்ஜி விஜிலாண்டே என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியை, 300,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதில் மற்ற பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காரைச் சுற்றி வளைத்து கூச்சலிடுவதையும், தங்கள் தலைக்கவசங்களால் காரைத் தாக்குவதையும் காட்டுகிறது. அடுத்தடுத்த படங்களில், உடைந்த முன்புறக் கண்ணாடி மற்றும் சேதமடைந்த முன்பகுதியையும் காணலாம்.

குறிப்புச் சொற்கள்