சிலேத்தார் விரைவுச்சாலையில் விபத்து; மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

சிலேத்தார் விரைவுச்சாலையில் விபத்து; மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

படம்: ஃபேஸ்புக்

23 Nov 2025 - 5:59 pm

1 mins read

மத்திய விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் சனிக்கிழமை (நவம்பர் 22) காலை நிகழ்ந்த விபத்தில் 72 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார்.

அந்த ஆடவர் ஓட்டிய மோட்டார் சைக்கிளும் லாரியும் விபத்துக்குள்ளானதாகவும் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காலை 8.55 மணி அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

லாரியை ஓட்டிய 71 வயது ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.

விபத்தை அடுத்து, சாலையின் வலது பக்கத்தில் இருந்த இரண்டு தடங்களும் மூடப்பட்டன. ஆக வலது தடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 9ஆம் தேதியன்று தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 36 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

குறிப்புச் சொற்கள்