சிராங்கூன், லாவண்டர் சாலைச் சந்திப்பில் விபத்து; ஆடவர் கைது

1 mins read
4bdac38d-2e85-4109-b1ee-12c10fc28790
கார் போக்குவரத்து விளக்குக் கம்பம் மீது மோதி சேதமடைந்திருந்ததைக் காட்டும் படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன. - படம்: எஸ்ஜிஆர்வி/ஃபேஸ்புக்

சிராங்கூன் சாலைக்கும் லாவண்டர் சாலைக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) இரவு 9.10 மணி அளவில் நிகழ்ந்ததாகச் சிங்கப்பூர் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

அதில் கார் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான 71 வயது ஆண் பாதசாரி, டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்தியவர் என்று நம்பப்படும் 37 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

அவர் ஓட்டிய கார் போக்குவரத்து விளக்குக் கம்பம் மீது மோதி சேதமடைந்திருந்ததைக் காட்டும் படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

சாலையிலும் நடைபாதையிலும் காரின் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடந்தன.

குறிப்புச் சொற்கள்