தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பச்சை அவரையால் கார் சக்கரங்களிலிருந்து காற்றை வெளியேற்றியதாகக் குற்றச்சாட்டு

1 mins read
ce699c84-86bc-4925-aa89-9994b0cc3dd6
நீதிமன்றத்திற்கு டிசம்பர் 17ஆம் தேதி வந்த பெஞ்சமின் சியா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கார் சக்கரங்களிலிருந்து காற்றை வெளியேற்றியதன் தொடர்பில் பொதுமக்களுக்குத் தொல்லை விளைவித்ததாக முதலில் 23 வயது பெஞ்சமின் சியா யிட் லூங் மீது குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் தொல்லை ஏற்படுத்திய குற்றச்சாட்டாக மாற்றப்பட்டது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவரான சியா, டிசம்பர் 17ஆம் தேதி நீதிமன்றத்திற்குத் திரும்பியபோது குற்றச்சாட்டு திருத்தப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்காக சியா விண்ணப்பித்த விடுப்பும் வழங்கப்பட்டது.

சியா உட்லண்ட்ஸ் டிரைவ் 14ன் புளோக் 517A, 519A ஆகியவற்றில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் நவம்பர் 19ஆம் தேதி ஐந்து கார்களின் சக்கரங்களிலிருந்து காற்றை வெளியேற்றியதுடன் கார் கண்ணாடிகளின் மீது துண்டுப் பிரசுரங்களையும் வைத்ததாக நவம்பர் 21ஆம் தேதி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சுற்றுச்சூழல் மீது ‘எஸ்யுவி’ வகை கார்களால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் பயன்பாட்டை ஒழிக்கும் இயக்கத்துடன் சக்கரங்களிலிருந்து காற்றை வெளியேற்றிய செயலைத் தொடர்புபடுத்துவதாக அந்தத் துண்டுப் பிரசுரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பச்சை அவரையை சியா ஒவ்வொரு டயரின் வால்வு தண்டுக்குள் புகுத்திக் காற்றை வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. குற்றச்சாட்டு திருத்தப்பட்டதை அடுத்து சியா ஏழு கார்களின் சக்கரங்களிலிருந்து காற்றை வெளியேற்றியதாகத் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்