டெஸ்கர் சாலையில் பரபரப்பு திரும்பிவிட்டது

டெஸ்கர் சாலையில் பரபரப்பு திரும்பிவிட்டது

1 mins read
1f2bf45b-9657-4835-87de-aa924b9415c3
சாலையில் புதிய வர்த்தகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டெஸ்கர் சாலையில் பரபரப்பு திரும்பிவிட்டது. கட்டுப்படியான வாடகையாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடக் கலையாலும் அந்தச் சாலையில் புதிய வர்த்தகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

எண் 106 டெஸ்கர் சாலையில் Aphrodite Waffles and Gelato கடையின் இணை உரிமையாளர் திரு லெனர்ட் கோ, 31, கடைத்தொகுதியில் தமது கடையைத் திறக்க பரிசீலித்ததாகக் கூறுகிறார். ஆனால், அங்கு வாடகைக் கட்டணம் அதிகமாக இருந்தது.

"அப்படியென்றால் ஒரு கரண்டி ஐஸ்கிரீமுக்கு குறைந்தது $12 கட்டணம் விதிக்க நேரிட்டு இருக்கும். அதுவும், சில கடைத்தொகுதி உரிமையாளர்கள் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை எடுத்துக்கொள்வார்கள்," என்கிறார் திரு கோ.

வாரயிறுதிகளில் 100 முதல் 150 மேசைகள் வரை அவர் சேவையாற்றுகிறார். ஒரு கரண்டி ஐஸ்கிரீம் விலை $5யில் தொடங்குகிறது. இரண்டு கரண்டி ஐஸ்கிரீம் $9க்கு விலைபோகிறது.

"தற்சமயம் நாங்கள் சிறிய அளவு லாபம் ஈட்டுகிறோம். இதைக் கொண்டு பொருள், சேவை வரி உயர்வு, மூலப்பொருள்களின் செலவு அதிகரிப்பு போன்றவற்றை ஈடுகட்ட நாங்கள் முற்படுகிறோம்," என்கிறார் அவர்.