சிங்கப்பூர் மேற்குப் பகுதிகளில் உள்ள பராமரிப்பாளர்களுக்கும் உடற்குறையுள்ளவர்களுக்கும் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்று வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி (மசெக) குழு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த இருபிரிவினர்களுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் வலுவாகும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
குறிப்பாக, வெஸ்ட் கோஸ்ட், நன்யாங், பூன் லே ஆகிய இடங்களில் வசிப்போருக்குக் கூடுதல் வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தலைமையில் மசெக போட்டியிடுகிறது.
அங்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மசெகவை எதிர்த்துப் போட்டியிடுகிறது. அந்தக் குழுவை டாக்டர் டான் செங் போக் வழி நடத்துகிறார்.