மூத்தோர் பராமரிப்பு, கருத்தரிப்புச் சிகிச்சைக்குக் கூடுதல் உதவி

1 mins read
bd68e752-9dc8-450b-be31-838ea3b78b58
மூத்தோருடன் தங்கியிருந்து அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பராமரிப்பாளர் சேவைக்கு பல மூத்தோர் பதிவுசெய்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்

சுகாதார அமைச்சு குறிப்பிட்ட சில கருத்தரிப்புச் சிகிச்சைகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கவிருக்கிறது.

முத்தோர் பராமரிப்புக்குக் கூடுதல் தெரிவுகள், ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின்கீழ் உள்ள கூடுதல் மருந்துகளுக்கு அதிக கழிவுகள் ஆகியவையும் அமைச்சின் திட்டங்களில் அடங்கும்.

ஒரே கூரையின்கீழ் பல மூத்தோரைப் பராமரிக்கும் சேவையை அமைச்சு இன்னும் பலரிடம் கொண்டுசேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

மூத்தோருடன் தங்கி அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பராமரிப்பாளர் திட்டம் 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

அந்தச் சேவைக்கு இதுவரை 200க்கும் அதிகமானோர் பதிந்துகொண்டதாக இரண்டாம் சுகாதார அமைச்சர் மஸாகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.

கருமுட்டை பாதுகாப்பு நடைமுறைகளுக்கான நிதியாதரவை சுகாதார அமைச்சு அதிகரிக்கிறது.

இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து 80 விழுக்காடு கழிவுகள் கருமுட்டை பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஒதுக்கப்படும்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அத்தகைய நடைமுறைக்கு மெடி‌ஷீல்ட் லைஃப் நிதியையும் பயன்படுத்தலாம்.

ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின்கீழ் மேலும் மூன்று மருந்துகளுக்கு 87.5 விழுக்காடு வரை மானியங்கள் வழங்கப்படும்.

ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் மருந்து, நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மருந்து ஆகியவை அவற்றுள் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்