சிங்கப்பூர் மக்கள், தங்களுக்கு மிகவும் பொருத்தமான மருத்துவக் காப்புறுதிகளைப் புரிந்து கொள்ள கூடுதல் உதவி வழங்கப்படும்
திங்கட்கிழமை ( செப் 9) நாடாளுமன்றத்தில் பேசிய சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸா இதனை தெரிவித்தார்.
மத்திய சேம நிதி, மனிசென்ஸ் ஆகிய இரண்டும் பற்றி தேசிய அளவில் போதிக்கப்படுகிறது என்றார் அவர்.
ஒருங்கிணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதற்கு முன்பு எவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்கும் கட்டுரைகள் ஏற்கெனவே உள்ளன.
இதில் முக்கியமாக மானியம் இல்லாத மருத்துவமனை சிகிச்சை விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
மனிதவள அமைச்சும் ஒருங்கிணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களுக்கு வாழ்நாளில் செலுத்த வேண்டிய சந்தா எவ்வளவு இருக்கும் என்பது பற்றியும் விளக்கங்களை வெளியிட்டுள்ளது.
வெவ்வேறு காப்புறுதி நிறுவனங்களின் பலன் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தால் மருத்துவக் கட்டணங்களின் பெரும்பகுதியை செலுத்த முடியாத ஒருங்கிணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தையும் கூடுதல் காப்புறுதியையும் வைத்திருப்பவர்களில் பாதிப் பேர் மானியமுள்ள வார்டுகள், பகல் நேர அறுவை சிகிச்சையை தேர்வு செய்வதாக அமைச்சர் ரஹாயு கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய நோயாளிகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் அல்லது கூடுதல் காப்புறுதி தேவைப்படாமல் இருக்கலாம். காரணம், மெடிஷீல்ட் லைஃப் போதுமானதாக இருக்கிறது என்று கூறிய அவர், இவ்வாண்டு பெரிய அளவில் பரிசீலிக்கப்பட்ட பிறகு மேலும் மேம்படுத்தப்படும் என்றார்.