பார்கே தரைவிரிப்பு நிறுவன முன்னாள் இயக்குநருக்குக் கூடுதல் சிறைவாசம்

பார்கே தரைவிரிப்பு நிறுவன முன்னாள் இயக்குநருக்குக் கூடுதல் சிறைவாசம்

1 mins read
7c337220-d60d-44a6-b6d7-62c106da3838
பார்கே தரைவிரிப்பு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் 59 வயது ஜேசன் சிம் சோன் அங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடிகளில் ஈடுபட்டதற்காகச் சிறைத் தண்டனை நிறைவேற்றிவரும் பார்கே தரைவிரிப்பு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருக்குக் கூடுதலாக ஆறு மாதச் சிறைத் தண்டனை திங்கட்கிழமை (ஜூன் 23) விதிக்கப்பட்டுள்ளது.

இரு வங்கிகளிடமிருந்து மொத்தமாகக் கிட்டத்தட்ட  $500,000 பணத்தை ஏமாற்றி பெற்றதாகத் தன்மீது சுமத்தப்பட்டிருந்த இரு குற்றச்சாட்டை அவர் ஒப்புகொண்டதை அடுத்து அவருக்குக் கூடுதல் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘ஜேசன் பார்கே ஸ்பெஷலிஸ்ட் சிங்கப்பூர்’ எனும் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான 59 வயது ஜேசன் சிம் சோன் அங், 2023ஆம் ஆண்டு மூன்று வங்கிகளை ஏமாற்றி $2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கடனாகப் பெற்றதாகக் கூறப்பட்டது.

அக்குற்றங்களுக்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் விதிக்கப்பட்டது.

ஜேசனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அரசுத் தரப்பு மேல் முறையீடு செய்தது. அதனையேற்ற நீதிபதி ஜேசனுக்குக் கூடுதலாக எட்டு மாதச் சிறைத் தண்டனை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் விதித்தார்.

தற்போது, மூன்று ஆண்டுகள் எட்டு மாதச் சிறைத் தண்டனையை அவர் நிறைவேற்றி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்