பணம் கையாடிய குற்றத்துக்காக முன்னாள் சட்ட நிறுவன அலுவலருக்குக் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
45 வயது சுஃபாண்டி அகமது ஏற்கெனவே ஒன்பது ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். வீட்டுக் கடன் பெற வங்கியை ஏமாற்ற சிலருடன் செயல்பட்டதற்காக 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து சுஃபாண்டி மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து, அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறையில் இருக்கும் அவருக்குக் கூடுதலாக ஓராண்டு நான்கு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கைத் துரோகம் உட்பட மற்ற சில குற்றங்களுக்காக அவருக்கு இந்தக் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சட்ட நிறுவனத்துக்காகப் பணிபுரிந்தபோது, $122,000க்கும் அதிக மதிப்புள்ள மூன்று காசோலைகளை சுஃபாண்டி கையாடினார்.
அதன் மூலம் கிடைத்த பணத்தை அவர் தமது சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இக்குற்றத்தையும் மற்றொரு குற்றத்தையும் புரிந்தததாக அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக்கொண்டார்.

