மனைவிகளை மயக்க நிலைக்கு ஆளாக்கி வன்கொடுமை செய்த கணவர்கள் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட ஆடவருக்குக் கூடுதலாக எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சம்பவத்தில் ஈடுபட்ட 47 வயது ஆடவர் பாலியல் படங்களை இணையத் தளத்தில் பதிவேற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆடவரின் பெயரை வெளியிடுவதற்குத் தடை உள்ளது.
பிற ஆடவரின் மனைவிகளுக்குப் போதைப் பொருள் கொடுத்து அவர்களை வன்கொடுமை செய்த கணவர்களில் 47 வயது ஆடவரும் ஒருவர்.
2010ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மனைவிகளின் வன்கொடுமைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவருக்கு கடந்த ஆண்டு ஜனவரியில் 13 ஆண்டு சிறைத் தண்டையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட கூடுதல் சிறைத் தண்டனை ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தண்டனை நிறைவேறியவுடன் தொடங்கும்.
2010ஆம் ஆண்டு ‘வைஃப் ஃபென்டசி’ (Wife Fantasy) என்ற இணையப் பக்கத்தை ஆடவர் தொடங்கியதாக அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தம்மைப் போன்ற தவறான எண்ணம் உள்ள பிற ஆடவர் தம்மைத் தொடர்புகொள்ளும்படி இணையப்பக்கத்தைத் தொடங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் கூறினார்.
பெண்களுடன் இருந்த முறையற்ற உறவையும் ஆடவர் காணொளியாகப் பதிவுசெய்தது விசாரணை மூலம் புலப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆடவர் பதிவுசெய்த பெண்களின் படங்களை அவர்களுக்குத் தெரியாமல் தாம் உருவாக்கிய இணையப்பக்கத்தில் பதிவேற்றினார்.
வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் இணையப்பக்கத்தில் வெளிவந்த படத்தைத் தமது கணவரின் கைப்பேசியில் கண்டுபிடித்ததை அடுத்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

