12 வயதுக்கும் அதற்கும் குறைவான வயதுடைய சிறார்க்குக் கூடுதல் ஆதரவு

12 வயதுக்கும் அதற்கும் குறைவான வயதுடைய சிறார்க்குக் கூடுதல் ஆதரவு

1 mins read
351c3cab-1c8f-4622-ad1f-4a872a6d2338
பாலர் பள்ளி தமிழ் ஆசிரியரும் அவரது மாணவர்களும்.  - படம்: சாவ்பாவ்

இந்த 2026ஆம் ஆண்டில் 12 வயதும் அதற்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு $500 ‘சைல்ட் லைப்எஸ்ஜி’ (Child LifeSG) உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் அத்தொகை வழங்கப்படும். 

மேலும், 2026ல் பிறக்கும் குழந்தைகளுக்கு 2027 ஏப்ரல் மாதம்  $500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் வோங் வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவித்துள்ளார்.

இதனை, ‘லைஃப்எஸ்ஜி’ கைப்பேசிச் செயலியின்மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

பெற்றோராக விரும்பும் இளம் தம்பதியினருக்கு ஏற்ற சிறந்த சூழலை அரசாங்கம் உருவாக்க முயல்கிறது. 

“திருமணம் செய்வதும் பிள்ளைகளைப் பெறுவதும் அவரவரின் தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது,” என்றார் திரு வோங்.  

மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற விரும்பும் குடும்பங்களுக்கு ஆதவளிக்க இதற்குமுன் பெரிய குடும்பங்கள் திட்டம் (Large  Families Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது.

மூன்று அல்லது அதற்கும் மேல் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் $16,000 வரை அத்திட்டம் உதவித்தொகை வழங்கியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்